ஓமன் நாட்டின் மஸ்கட்டில் வசித்து வந்த ஷாரதா ஐயர் (52), கடந்த சனிக்கிழமை அன்று நண்பர்களுடன் இணைந்து ஜபல் ஷம்ஸ் (Jabal Shams) மலைப்பகுதியில் ட்ரக்கிங் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இவரது தந்தை டாக்டர் ஆர்.டி. ஐயர் காலமானார். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு கடந்த வாரம் தான் ஷாரதா மஸ்கட் திரும்பியிருந்தார். இந்த நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளேயே குடும்பத்தில் மற்றொரு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாழவா, ஜனவரி 5: பாடகி சித்ரா ஐயரின் சகோதரியான ஷாரதா ஐயர், ஓமன் ஏர் நிறுவனத்தின் முன்னாள் மேலாளராகப் பணியாற்றியவர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள தாழவா பகுதியைச் சேர்ந்த இவர், நீண்ட காலமாக ஓமனில் வசித்து வந்தார். ஷாரதாவின் மறைவு குறித்துப் பாடகி சித்ரா ஐயர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். “எனது அன்பு சகோதரி ஷாரதா, நேற்று மதியம் ஓமனில் ட்ரக்கிங் சென்றபோது அப்ரதீட்சமான விபத்தில் எங்களை விட்டுப் பிரிந்தார். நாங்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஷாரதாவின் உடல் தற்போது ஓமனில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, அவரது உடல் சொந்த ஊரான தாழவாவுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. வரும் ஜனவரி 7-ஆம் தேதி அன்று தாழவாவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தையின் இழப்பில் இருந்து மீள்வதற்குள், சுறுசுறுப்பான ஒரு வீராங்கனையாகவும் திகழ்ந்த ஷாரதாவின் இந்தத் திடீர் மறைவு சித்ரா ஐயரின் குடும்பத்தினரையும், கலைத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா: மலையில் மோதிய ஹெலிகாப்டர்..!! பரிதாபமாக பறிபோன 4 உயிர்..!!
இதையும் படிங்க: உத்தரகாண்டில் பயங்கரம்..!! ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட ரயில்கள்..!! தொழிலாளர்களின் கதி என்ன..??