சிவகங்கை மாவட்டம் நிரஞ்சான் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையிலேயே வைத்து மாணவனை கத்தியால் சக மாணவன் குத்திய கொடூரம் நிகழ்ந்து உள்ளது. தனிப்பட்ட பகை காரணமாக மாணவன் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. காயமடைந்த மாணவர் பட்டியலினத்தவர் என்ற தகவல் வெளியாக இருக்கும் சூழலில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவத்தை காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எதற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம் என்று திமுக விமர்சனம் செய்துள்ளது.

பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மனதை நஞ்சாக்கும் உங்கள் அரசியல் அராஜகத்தால் இன்று ஒரு தலித் மாற்றுத்திறனாளி மாணவனின் உயிர் பலிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: வகுப்பறையில் அரங்கேறிய கொடூரம்..! +2 மாணவனுக்கு கத்திக்குத்து..!! சிவகங்கையில் பதற்றம்.!!
கல்வி கற்க வேண்டிய இடத்தில் கத்தி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்றும் ஆனால், 'தூய சக்தி' என்று மேடை போட்டுப் பேசும் முதலமைச்சர் விஜய், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியதுண்டா எனவும் கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பள்ளி வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடக்கும் அளவிற்கு உங்கள் நிர்வாகம் சீரழிந்து கிடப்பது, உங்கள் அரசின் கையாலாகாத்தனத்தின் அப்பட்டமான சாட்சி என்றும் திமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!