ஆந்திரப் பிரதேசத்தின் தெனாலியில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண தொலைபேசி அழைப்புகள் மோசடி வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர். என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவை சேர்ந்த அனுராதாவின் குடும்பத்தினர் எட்புகல்லு பகுதியில் வசித்து கொண்டுருந்தபோது அவரது தோழி விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் துளசி மூலம் ஸ்வீட்டி க்யூட்டி' என்ற பெயரில் 'ஸ்ட்ரிப் டாக்' என்ற ஆன்லைன் போர்ட்டலில் வீடியோ அழைப்பு செய்து, அவர்களின் வேண்டுகோளின்படி நிர்வாணமாகப் பேசி பணம் சம்பாதிப்பதை அறிந்தார்.
இதனையடுத்து அனுராதாவும் அவரது மகன் ஹேமந்த் சாயும் இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டு அதேபோன்று தாயை வைத்து பணம் சம்பாதிக்க தொடங்கினர். இதற்கிடையில் ஹேமந்த் சாய் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது படிப்பை நிறுத்திவிட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜயவாடாவில் தனது தாய் மற்றும் மனைவியுடன் ஒன்றாக வசித்து வந்தபோது நிர்வாண அழைப்புகள் குறித்து அறிந்த அவரது மனைவி தெனாலிக்கு சென்றார். சில நாட்கள் பிறகு ஹேமந்த் சாய் தனது மனைவியுடன் தெனாலியில் வந்து தங்கினார். அதன் பிறகு சில நாட்களில் அனுராதாவும் தனியாக இருக்க முடியாமல் தெனாலிக்கு வந்தார்.
தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த அனுராதாவுக்கு, ஷாநாஸ் என்ற பெண் அறிமுகமானார். அவரிடம் இந்த செயலி குறித்து தெரிவித்து மகனுடன் சேர்ந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். அனுராதா தெனாலிக்கு வந்த பிறகு மீண்டும் அதுபோன்று செய்து வந்ததால் இதனை விரும்பாத அவரது மருமகள் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தெனாலி மூன்றாவது நகர போலீசார் இந்த வழக்கில் முதற்கட்டமாக ஹேமந்த் சாயியை கைது செய்த போலீசார் அனுராதா, ஷாநாஸ் இருவரையும் பாதிக்கப்பட்டவர்களாக கருதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் டேஞ்சர் - பாஜக, அதிமுகவை நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்...!
விஜயவாடாவைச் சேர்ந்தவர்களின் தொடர்பு, செயலியின் விவரங்கள் மற்றும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து தொழில்நுட்ப உதவியுடன் விசாரணையை மேற்கொண்டு நடத்தப்படும் என
டிஎஸ்பி பி. ஜனார்த்தன ராவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்... அதிரடியாக அமலுக்கு வரும் முக்கிய விதிகள் என்னென்ன?