• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சென்னை பெரும்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Jul 2026 15:00:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Dismisses Builders' Plea Against Cancellation of Pallikaranai Marshland Project.

    சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. கட்டுமான நிறுவனங்களின் இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 17, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இயற்கை அமைப்பை முற்றிலும் அழிக்கும் வகையில், "பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு கடந்த 2025 ஜனவரி மாதம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சிஎம்டிஏ மற்றும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆகியவை அனுமதி வழங்கியிருந்தன.

    சதுப்பு நில அழிவுக்கு எதிராகச் சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தன. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், கடந்த 2025 அக்டோபர் மாதம் இக்கட்டுமானத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    அடுக்குமாடி குடியிருப்பு

    அதன் தொடர்ச்சியாக, கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின்" (Tamil Nadu Wetlands Authority) தடையில்லாச் சான்று பெறாமல் கட்டுமானத்தைத் துவங்கி நிபந்தனைகளை மீறியதால், பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. மாநில அரசின் இந்த ரத்து உத்தரவை எதிர்த்து பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் மற்றும் மார்கன் ஏசியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த மெகா திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி, எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி விவகாரத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன.

    சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கென்றே 'தேசிய பசுமை தீர்ப்பாயம்' (NGT) போன்ற தகுதியான சட்ட அமைப்புகள் உள்ளன. அதுதான் இதற்கான உரிய அமைப்பு. எனவே, விதிகளையெல்லாம் தாண்டி நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.  சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தால், சட்ட விதிகளின்படி நீங்கள் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தையோ அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தையோ தான் அணுகியிருக்க வேண்டும். அதை விடுத்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இருப்பினும், மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அமைப்புகள் விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, கட்டுமான நிறுவனங்களின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கத் தொடரப்பட்ட சட்டப் போராட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விலங்கு பலி தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! தமிழக அரசின் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ வரவேற்பு!

    மேலும் படிங்க

    'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் கறிக்கடை மாமா நினைவிருக்கா..!! நடிகர் VC ஜெயமணி காலமானார்..!!

    தொலைக்காட்சி
    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்
    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" -

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு
    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share