மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 73 வழக்குகள் மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் வக்பு சொத்தை முடிவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ‘யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை’.. காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்..!

இனிமேல் இஸ்லாமியர்களை இந்து வாரியங்களில் அனுமதிப்பீர்களா எனவும் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். மேலும், வக்ஃபு திருத்த மசோதாவில் மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பித்தம் தலைக்கு ஏறிய டிரம்ப்..! 245% வரி விதித்து சீனாவுக்கு அதிர்ச்சி..!