பாகிஸ்தான் பொருளாதார நிலைமை அதளபாதாளத்துக்கு சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அளவைவிட, தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களின் ஜிடிபி சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. ஒப்பீட்டளவில் பார்த்தால் பாகிஸ்தான் ஜிடிபியை விட தொழில்வளர்ச்சி அதிகமாக இருக்கும் தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களின் ஜிடிபி அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபி பாகிஸ்தானைவிட 10 மடங்கு உயர்வாக இருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருப்பதால், அந்நாடு அவ்வப்போது சர்வதேச பண நிதியம் (ஐஎம்எப்) வழங்கும் கடனை நம்பியை பிழைப்பு நடத்துகிறது. ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து 123 கோடி டாலர் கடனுதவியை நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் பெற்றது.
இதையும் படிங்க: தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!
கடந்த 1958ம் ஆண்டிலிருந்து ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து 25-வதுமுறையாக பாகிஸ்தான் திவாலாகி கடன் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் பொருளாதார நிலைமை படுவீழ்ச்சி அடைந்து மோசமாகி, திவால் நிலைக்கு சென்றுவிட்டது,அப்போது 300 கோடி டாலர்களை ஐஎம்எப் கடனாக வழங்கியது.

ஐஎம்எப் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 2.6% ஆக இருக்கிறது, இதன் ஜிடிபி 3730.80 கோடி டாலராக இருக்கிறது. அரசியல் நிலையற்றதன்மை, உயர்ந்த பணவீக்கம், மோசமான பேலன்ஸ் ஆப் பேமெண்ட்ஸ், ஆகியவை பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமாக நலிவதற்கு காரணமாகும்.
2004-05ம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் நிமிரந்து 12300 கோடி டாலராக உயர்ந்தது என்று ஆர்பிஐ, உலக வங்கி தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் தமிழகத்தின் ஜிடிபி என்பது4800 கோடி டாலராகும் அதாவது பாகிஸ்தான் ஜிடிபியில் 37 % தமிழகம் வைத்திருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் 9200 கோடி டாலர் அதாவது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 69 சதவீதத்தை வைத்திருந்தது. இந்த இரு நாடுகளம் பாகிஸ்தான் பொருளாதாரத்தையே விஞ்சும் வகையில் இருந்தன. 2023-24ம் ஆண்டில் பாகிஸ்தான் ஜிடிபி 33800 கோடி டாலராகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜிடிபியின் அளவில் 69 சதவீதமாகும், மகாராஷ்டிரா ஜிடிபி 49000 கோடி டாலராக இருக்கிறது. தமிழகத்தின் ஜிடிபி 32900 கோடி டாலராகும் அதாவது ஏறக்குறைய பாகிஸ்தான் ஜிடிபி அளவுக்கு இணையாக தமிழகத்தின் பொருளாதாரம் இருக்கிறது.
இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!