தமிழகம், கேரளா மற்றும் டெல்லியில் ஓர் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது, தேசிய சராசரியைவிட இரு மடங்கு குறைந்தது என்று மாதிரி பதிவேடு புள்ளிவிவரங்கள் (எஸ்ஆர்எஸ்) குறித்த 2021 அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மாதிரி பதிவேடு புள்ளிவிவரங்கள் (எஸ்ஆர்எஸ்) அறிக்கையில் 2021ம் ஆண்டில் நாட்டின் தேசிய பிறப்பு விகிதம் 19.3 ஆக இருக்கிறது. 2016 முதல் 2021 வரை 1.12 சதவீதம் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இது தமிழகத்தில் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 2.35 சதவீதம் குறைந்து வருகிறது, டெல்லியில் 2.23% கேரளாவில் 2.05% சதவீதம் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!
குழந்தை பிறப்புவிகிதம் மிகக்குறைந்த அளவு குறைந்த மாநிலங்களைப் பொருத்தவரை ராஜஸ்தானில் 0.48%, பீகாரில் 0.48%, சத்தீஸ்கரில் 0.98%, ஜார்க்கண்டில் 0.98%, அசாமில் 1.05%, மத்தியப்பிரதேசத்தில் 1.05%, மேற்கு வங்கத்தில் 1.08%, உத்தரப்பிரதேசத்தில் 1.09% மெதுவாகக் குறைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே பிறப்பு விகிதம் சுற்று அதிகரித்துள்ளது.

தேசிய சராசரியைவிட வேகமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் 13 மாநிலங்களில் குறைந்துள்ளது. தென்மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம் (1.26%), தெலங்கானா(1.67%), கர்நாடகா(1.68%),கேரளா மற்றும் தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் பிறப்புவிகிதம் குறைந்துள்ளது.
எஸ்ஆர்எஸ் என்பது மக்கள் தொகை குறித்து கணக்கெடுக்கும் புள்ளிவிவர அமைப்பாகும். இந்த கணக்கெடுப்பு மூலம் குழந்தைகள் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிடவற்றை கண்டறிந்து கொள்கைகளை மாற்றி அமைக்க இயலும். இதற்காக 2021ம் ஆண்டில் நாடுமுழுவதும்8842 மாதிரி 84 லட்சம் பேரிடம் இருந்து எடுக்கப்பட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எவ்வாறு செல்கிறது, எந்தெந்த மாநிலங்களி் மக்கள் தொகை வளர்ச்சி அதிகம், குறைவு, வளர்ச்சி வேகம் எந்த மாநிலத்தில் அதிகம், எந்த மாநிலத்தில் குறைவு ஆகியவற்றை அறிய முடியும்.

குழந்தை பிறப்பில் தேசிய சராசரியைவிட வேகமாகக் குறைந்து வருவதில் தென் மாநிலங்கள் தவிர்த்து வடமாநிலங்கள் சிலவும் உள்ளன. அதில் மகாராஷ்டிரா(1.57%), குஜராத்(1.24%), ஒடிசா(1.34%), இமாச்சலப்பிரதேசம்(1.29%), ஹரியானா(1.21%), ஜம்மு காஷ்மீர்(1.47%) ஆகிய மாநிலங்களில் பிறப்புவிகிதம் குறைந்துள்ளது.
அதேசமயம், குழந்தைகள் பிறப்பு விகிதம் 11 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. பீகார், ராஜஸ்தான், உ.பி. உத்தரகாண்ட், மே.வங்கம், ஜம்மு காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்களைப் பொருத்தவரை 2012ம் ஆண்டிலிருந்து தமிழகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டவகையில் குறைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு பெண் தனது ஆயுள்காலத்தில் இந்தியாவில் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்கிறார் என்று 2021 அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால், பீகாரில் இது 3 குழந்தைகளாகவும், உ.பி.யில் 2.7, ராஜஸ்தானில் 2.4, மத்தியப்பிரதேசத்தில் 2.6 ஆகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!