நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் சார்பில் தமிழகத்தை மீட்கும் போராட்டம் என்ற தலைப்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ ராஜா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்திருந்தனர்.
அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது: இன்றைய தினம் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கூட்டமே கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் வெற்றிகரமான தேர்தலாக அமையும்.
இதையும் படிங்க: யாருக்கும் அழுத்தம் கொடுக்குற அவசியம் இல்ல... தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டம்..!!
நம்மை பார்த்தவுடன் சூரியன் மறைந்துவிட்டது. சூரியன் கூட மறைந்துவிடும் என்பதற்கு இந்த ஆர்ப்பாட்டம் உதாரணம். இங்கே வந்திருப்பவர்கள் அனைவருமே என் நெஞ்சில் தாமரையாக வீற்றிருக்கிறீர்கள்.சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற உறுதிபாட்டோடு நிகழ்ச்சியை தொடர்வோம்.
எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரங்கள். 2 பலாத்காரங்கள் என் நெஞ்சை உருக்கியது.தூத்துக்குடியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிக்கிய குடும்பத்தினர் அவலப்பட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்காமல் 2 சிறுவர்களை அழைத்து வந்து ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார்.அம்மா ஆட்சி தமிழகத்திற்கு 2026ல் வரவேண்டும் என்பது நாம் உறுதியாக இருக்க வேண்டும்.அம்மா உயிரோடு இருந்தால் குற்றவாளிகள் நடமாட முடியாது.அம்மா என்றால் அம்மா தான். தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு அம்மா தான் இருக்க முடியும். அது ஜெயலலிதா அவர்கள் மட்டும்தான். என்னை அக்கா என்று அழையுங்கள்.
2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த பின் நீதி நிலைநாட்டப்படும்.இனிமேல் ஸ்டாலின் முன்னாள் முதல்வராக தான் வலம் வர முடியும். சகோதரி கனிமொழி தூத்துக்குடி பாலியல் பலாத்கார சம்பவத்தில் உங்களதுபதில் என்ன?. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உங்கள் அனைவரையும் பார்த்து கேட்கிறேன் உங்களது பதில் என்ன?. யாராவது எதிர்த்து குரல் கொடுத்தீர்களா. கூட்டணியிலிருந்து வெளியே வருவோம் என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா? ரங்கசாமி புதுச்சேரியில் 5000 கொடுத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இவர்கள் கொடுக்கவில்லை. இன்னும் திமுகவிற்கு ஓட்டு போட்டால் உங்களது குழந்தைகள் பத்திரமாக இருக்காது என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்" ..? சீரியல் முடிஞ்சுது..!! தமிழிசை தாக்கு..!!