டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையைச் சட்ட விரோதமானது என்று அறிவிக்க அறிவிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறை வரம்பு மீறிச் செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம் என்று தெரிவித்த நீதிமன்றம் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அமலாக்கத்துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 4 சம்பவம்.. திமுகவிற்கு இடியை இறக்கிய கோர்ட்..!!
இதை எதிர்த்து அமலாக்கத் துறை ரெய்டு மற்றும் அதனைத் தொடர்ந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கத் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அதன் அடிப்படையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் சோதனை வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்றும் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயல்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு பெரும் சிக்கல்..! ED சோதனைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கு தள்ளுபடி..!