தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நகரில் விநாயகர் நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற லட்டு ஏலம் சாதனை விலைக்கு விற்பனையாகியது. நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக வழிபாட்டில் விநாயகரின் கைகளில் வைக்கப்பட்ட லட்டுவைப் பெறுவதில் பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். விநாயகர் லட்டு ஏலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பண்ட்லகுடா ஜாகீரில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் கடந்த ஆண்டு இங்குள்ள விநாயகர் லட்டு ₹ 1.87 கோடி ( ₹ 1 கோடியே 87 லட்சத்து 36 ஆயிரத்து 500) என்ற சாதனை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு, அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தது.
பண்ட்லகுடா ஜாகீரில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் ஏற்பாடு செய்த விநாயகர் லட்டு ஏலத்தில் 80க்கும் மேற்பட்ட வில்லா உரிமையாளர்கள் நான்கு குழுக்களாக ஏலத்தில் பங்கேற்றனர். ஏலம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இந்த ஏலத்தில் விநாயகர் லட்டு இறுதியாக ₹ 2 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்திற்கு 10 கிலோ லட்டுவை பால கணேஷ் அணி வென்றது. இந்த ஏலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் ஆர்.வி. தியா அறக்கட்டளைக்கு அனுப்பப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது 42க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவிகள் செய்வார்கள். ஒவ்வொரு பைசாவும் கள அளவில் பயன்படுத்தப்படும் என்று அவர்கள் கூறினர். ஏலத்தில் பெற்ற லட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
2018 ஆண்டில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாவில் விநாயகர் லட்டு ஏலம் தொடங்கியது. அந்த ஆண்டு ₹ 25,000 மட்டுமே ஏலம் எடுத்தனர்.அதன் பிறகு, 2019 இல், அது ₹. 18.75 லட்சத்தையும், 2020 இல் ₹ 27.3 லட்சத்தையும், 2021 இல் ₹ 41 லட்சத்தையும், 2022 இல் ₹ 60 லட்சத்தையும், 2023 இல் ₹1.26 கோடிக்கு விற்றது. கடந்த சில ஆண்டுகளாக, ஐதராபாத் நகரத்தில் உள்ள பல இடங்களில் லட்டு சாதனை விலையில் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: 3 மாத உழைப்பு; பல லட்சம் செலவழிப்பு... தடபுடலாக தயாராகும் பிரம்மாண்ட ‘புஷ்பா 2’ விநாயகர்...!
இந்த ஆண்டு, மைஹோம் புஜா கேட்டட் கம்யூனிட்டியில் நடந்த விநாயகர் லட்டு ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் கம்மம் மாவட்டம் இல்லந்துவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொண்டப்பள்ளி கணேஷ், அதை ₹ 51 லட்சத்து 07 ஆயிரத்து 777க்கு வாங்கினார். கடந்த ஆண்டும், கொண்டப்பள்ளி கணேஷ் இங்கு ₹ .29 லட்சத்திற்கு லட்டுவை ஏலத்தில் வாங்கினார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள பாலபூர் விநாயகர் லட்டு ஏலம் அனைவரின் கவனமும் பொதுவாக இருக்கும். பாலப்பூர் விநாயகர் லட்டு ஏல செயல்முறை 1994 இல் தொடங்கியது. இந்த பாரம்பரியம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு, கோலன் சங்கர் ரெட்டி ஏலத்தில் ஒரு லட்டு ₹.30.01 லட்சத்திற்கு வாங்கினார். இந்த ஆண்டு பாலாபூர் விநாயகர் லட்டு ஏலத்தில் ₹ 35 லட்சத்திற்கு விற்பனையானது. இந்த லட்டு கர்மன்காட்டைச் சேர்ந்த லிங்கலா தசரத் கவுட் பெற்றார்.
இதற்கிடையில், ஐதராபாத்தில் விநாயகர் விஜர்சனம் ஊர்வலங்கள் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கைரதாபாத் மகா கணபதி பக்தர்கள் வெள்ளத்தில் நகரில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு உசேன் சாகர் ஏரியில் பாகபலி கிரேன் மூலம் கரைக்கப்பட்டது. இதேபோன்று நகரின் பல்வேறு இடங்களில் வைத்த சுமார் 1 .20 லட்சம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் இறுதியாக முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: எங்களையும் பதவியை விட்டு தூக்குங்க... எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஈரோடு அதிமுக டீம்...!