2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பட்ஜெட் மூன்று முக்கியக் கடமைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உலகப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சியைத் தக்கவைக்க இந்த மூன்று தூண்கள் வலுவான அடித்தளமாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

இதுவே இந்த பட்ஜெட்டின் முதல் மற்றும் மிக முக்கியமானக் கடமையாகும். நாட்டின் ஜிடிபி வளர்ச்சியைத் தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் தக்கவைப்பதும், விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பதும் இதன் நோக்கம். பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சி நீண்டகால அடிப்படையில் நிலையானதாக இருப்பதை அரசு உறுதி செய்யும்.சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் முன்னேற்றமே இரண்டாவது கடமை. அரசின் திட்டங்கள் அனைத்தும் எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதை ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதோடு, உள்கட்டமைப்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளை மேற்கொள்வது மூன்றாவது கடமை. ரயில்வே, சாலைப் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை நவீனப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்துவதே இதன் இலக்காகும்.இந்தியா இன்று உலகின் ஐந்தாவது பெரியப் பொருளாதார நாடாகத் திகழ்கிறது. நிலையானப் பொருளாதார வளர்ச்சி என்ற எங்களது முதல் கடமையை நிறைவேற்றுவதன் மூலம், மிக விரைவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரியப் பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று நிதியமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!
இதையும் படிங்க: நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!