தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்த கருப்பையா(லேட்) என்பவரது மகன் ஜெயக்குமார் 27. கடந்த 4ஆம் தேதியன்று இரவு 9மணி அளவில் அவருக்கு வந்த செல்போன் அலைப்பின் காரணமாக வெளியே சென்ற நபர், இரவு வீடு திரும்பாததால், மறுநாள் காலையில் போடிதாலுகா காவல்நிலையத்தில் அவரது தாயார் ராணி மகனை காணவில்லை என புகாரளித்துள்ளார்.
இதையடுத்து புகார் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், போடிதாலுகா அம்மாபட்டியில் இருந்துபெருமாள் கவுண்டன்பட்டி செல்லும் சாலை ஓரத்தில் விநாயகம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றின் அருகே சில செருப்புகளும், காணமல்போன ஜெயக்குமாரின் உடைகளும் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில்.தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் எதேனும் உடல் இருக்கலாம் என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
3மணி நேர தேடுதலுக்கு பின் உடலில் காயங்களுடன் ஜெயக்குமாரின் உடலானது மீட்கப்பட்டது. இதையடுத்து சந்தேக மரண வழக்கு பதிவு செய்த போடிதாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஜெயக்குமாரின் நண்பர்களான போடியை சேர்ந்த ஹரிபிரசாத், சின்னமனூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரும் ஜெயக்குமாரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றதாக கிடைத்த தகவலின் பேரில், இருவரையும் தேடும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!
அப்போது இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், நண்பனான ஜெயக்குமார் கடந்த ஜீன் மாதம் தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மதுபோதையில் சென்றபோது போலீசாரிடம் சிக்கியதில், தங்களது இருசக்கர வாகனத்திற்கு அபதாரம் விதித்ததாகவும், அபராதத் தொகை அவர் கட்டாத நிலையில் அதை தாங்களே கட்டிவிட்டு இருசக்கர வாகனத்தை மீட்டதாகவும், அந்த பணத்தை தருவதாக கூறி நாட்களை கடத்தி வந்த ஜெயக்குமார் பணத்தை தராததால் அவருடன் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்து அவரை அம்மாபட்டியில் இருந்து பெருமாள்கவுண்டன்பட்டி செல்லும் சாலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறியதில், அருகில் உள்ள விநாயகம் என்பவரது தென்னந்தோப்பில் வைத்து ஜெயக்குமாரை ஆடைகளை களைந்து,தென்னைமர.சொட்டுநீர் பாசனத்திற்கான பிளாஸ்ட்டிக் ஓஸ் மூலம் கை,கால்களை கட்டிவைத்து அடித்ததாகவும், அவர் மயக்கமடைந்த நிலையில், ஜெயக்குமாரை தோட்டத்தில் உள்ள சுமார் 110அடி ஆழ கிணற்றில் தூக்கி வீசிவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இருவரையும் போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். போதையில் பணத்திற்காக தங்களது நண்பனையே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!