மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும் ஆட்சி செய்து கொண்டிருந்த போது சின்ன, சின்ன ஜெயின் பறிப்பிற்கு கூட ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பொங்கிய கோலிவுட் பிரபலங்கள் பலரும், இப்போது திமுக ஆட்சியில் காணாவில்லை போஸ்டர் ஒட்டும் அளவிற்கு நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு கப்சிப் என இருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடிச்சி எவன் செத்தால் என்ன, வேங்கை வயல் குடிதண்ணீரில் மலம் கலந்தால் எங்களுக்கு என்ன, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து எல்லாம் அவ்வளவு பெரிய விஷயமா? என வாயை மூடிக்கொண்டிருந்தவர்கள், இன்று மீண்டும் திருபுவனம் இளைஞர் லாக்அப் டெத் விவகாரத்தில் காட்டி வரும் மெளனம் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களைக் கிளப்பி வருகிறது.

திமுகவிற்கு ஜால்ட்ரா தட்டும் பிரகாஷ்ராஜ், சத்தியராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், கமல் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும், இதில் குறிப்பாக தேடப்படும் கோலிவுட் ஜோடியாக சூர்யா, ஜோதிகா இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது இப்போது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருப்பது நாம்தான் நண்பர்களே என சூர்யா பதிவிட்டார். ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு, மும்பைக்கு 120 கோடி ரூபாயில் பங்களா ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆகிவிட்டார். குறிப்பாக லாக்கப் மரணம் குறித்து நடிகர் சூர்யா ஜெய்பீம் என்ற படத்தில் நடித்ததை பெருமையாக பேசினார். தற்போது அதே லாக்கப் மரணம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து வயை திறக்காமல் புகழ் பெற்ற சீஷர்ஸ் தீவில் விடுமுறையை கழித்து வருகிறார். அதுவும் நடிகை ஜோதிகாவுக்கே டப் கொடுக்கும் வகையில் குட்டை டவுசருடன் விதவிதமாக போஸ் கொடுத்து சோசியல் மீடியாவில் அப்லோடு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் செகண்ட் ஹனிமூன் கொண்டாடி வரும் சூர்யா, ஜோதிகா ஜோடியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

ஜெய்பீம் என ஒரு படம் எடுத்தீர்களே அது எல்லாம் வெறும் கலெக்ஷனுக்காக தானே. அதே படத்தில் நடந்தது போல இளைஞர் ஒருவர் போலீசாரால் 18 மணி நேரம் தண்ணீர் கூட கொடுக்காமல் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார். இதற்காக குரல் கொடுக்கமாட்டீர்களா?, சோசியல் மீடியாவில் ஒரு இரங்கல் பதிவிடவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி கன்றாவியான போட்டோக்களைப் போட்டு எங்களை வெறுப்பேற்றாதீர்கள் என எச்சரித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா, ஜோதிகா பேசிய பேச்சுக்குத் தான் கங்குவா, ரெட்ரோ படங்கள் சரியாக ஓடாமல் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்துள்ளது சிவக்குமார் குடும்பம். இப்போது சரியான நேரத்தில் தீவுக்குப் போய் சுற்றுலா கொண்டாடி, தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்த சூர்யா தான் இன்று மும்பையில் சொந்தமாக பிளாட் வாங்கி செட்டில் ஆகியிருக்கிறார். மேலும் இந்தியும் கற்று வருகிறார். இப்படி எனக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என கண்டுகொள்ளாமல் சுற்று வரும் இந்த நட்சத்திர தம்பதிக்கு அவர்களது அடுத்தடுத்த படங்கள் மூலம் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்களா? என பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!