மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், நடிகர் சிலம்பரசன், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் திரைப்பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்து கன்னட மொழி வந்ததாக கமல்ஹாசன் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் பல குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

தக் லைஃப் என்றால் போக்கிரிகள், மூர்க்கர்கள், பொறுக்கிகள் என்று பொருள்படும் என்றும் எனவே படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். THUGS AND PINDARIS என்பவர்கள் இந்தியாவை அச்சுறுத்திய வழிப்பறி கொள்ளை கூட்டம் என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார். ஏற்கனவே சண்டியர் என பெயரிடப்பட்ட படத்தின் தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விருமாண்டி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலை எம்.பி.யாக ஆக்க வேண்டாம்.. திமுகவுக்கு திடீர் கோரிக்கை வைத்த தமிழக அரசியல் கட்சி.!!