உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நெய் கலப்படம், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணியில் ரூ 100 மோசடி கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மற்றொரு மோசடி வெளி வந்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களுக்கு வேத ஆசிர்வாதம் செய்து பட்டு வஸ்திரம் ( சால்வை ) தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக தேவஸ்தான ரூ 3000 கட்டணம் வசூல் செய்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்கள், விஐபிக்கள் மற்றும் சிறப்பு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த ( சால்வை ) பட்டு வஸ்திரத்தால் தரமானதாக இருக்க வேண்டும். ஆனால் பட்டு வஸ்திரத்திற்கு பதிலாக பாலியஸ்டர் வழங்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 2019 ஆண்டு முதல் 2025 வரை ரூ. 120 கோடி அளவுக்கு பட்டு வஸ்திரம் மோசடி நடந்துள்ளது. ஒரே ஒப்பந்ததாரருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டதால் 100 சதவீத பட்டுக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகளை அந்த நிறுவனம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தலைவர் பிஆர் நாயுடு இதுகுறித்து சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, உள் விசாரணை நடத்தப்பட்டதில் இந்த மோசடி தெரியவந்தது. கோயிலில் பயன்படுத்தப்படும் வஸ்திரம் தூய பட்டுக்கு பதிலாக, ஒப்பந்ததாரர் மலிவான பாலியஸ்டரை வழங்கி உள்ளதாகவும்
பல வருடங்களாக இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏழுனலையான் கோயிலுக்கு ரூ. 120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் ரூ. 350 விலையுள்ள ஒரு சால்வைக்கு ரூ. 1,300க்கு ஒப்பந்தம் கோரி டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாநில அரசு ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையை கோரியுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு கடந்த செப்டம்பரில் தெரிவித்தார். சால்வைகளின் மாதிரிகளை அறிவியல் பகுப்பாய்விற்காக தேவஸ்தான அதிகாரிகள் இரண்டு ஆய்வகங்களுக்கு அனுப்பினர் இதில் மத்திய பட்டு வாரியத்திற்கும் அனுப்பப்பட்டது. இரண்டு சோதனைகளிலும் அந்த சால்வை பாலியஸ்டர் என்பதை உறுதிப்படுத்தியது. இது டெண்டரில் குறிப்பிடப்பட்ட நிபந்தனை மீறலாகும். தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்ட மாதிரிகளில் உண்மையான பட்டு பொருட்களை அங்கீகரிக்கும் கட்டாய பட்டு ஹாலோகிராம் இல்லை என்பதை விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் வழக்கில் முதல் அதிரடி ஆக்ஷன்... முக்கிய சீனியர் அதிகாரியை வீடு புகுந்து தூக்கிய எஸ்.ஐ.டி...!
விஜிலென்ஸ் அறிக்கையை வைத்து தேவஸ்தான அறங்காவலர் குழு அந்த நிறுவனத்துடனான அனைத்து டெண்டர்களையும் ரத்து செய்தது. இந்த முழு விஷயமும் முழுமையான விசாரணைக்காக மாநில ஏசிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழுமலையான் கோயில் புனித லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், , பரகாமணி திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. தற்போது பட்டு வஸ்திரம் ஊழல் வெளி வந்துள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான ஏழுமலையான் கோயிலில் தொடர்ச்சியான மோசடி குற்றச்சாட்டுகளால் பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐதராபாத்தில் உள்ள தேவஸ்தான கோயிலுக்கு சென்ற அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தேவஸ்தானம் ஒவ்வொரு சால்வையும் ரூ 1,334 வாங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்த பெற்ற நிறுவனம் வழங்கியது ரூ 100 கூட மதிப்பு இல்லை இவை போலியான பட்டு சால்வைகளாகும். சரிபார்ப்புக்காக நானே ஒன்றை வாங்கினேன், தரத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதே துணி தேவஸ்தானம் பெரிய அளவில் வழங்கப்பட்டது.
இந்த ஊழலில் இதுவரை சுமார் ரூ 120 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடி சில தேவஸ்தான ஊழியர்களின் ஆதரவுடன் 2019 ஆண்டு முதல் நடந்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொள்முதல் பிரிவு பொறுப்பாளரை ஏற்கனவே இடைநீக்கம் செய்துள்ளோம். ஊழல் தடுப்பு ( ஏ.சி.பி. ) தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் - எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மோசடியில்
பொறுப்பானவர்களின் முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு! டிச. 29-ல் புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: முக்கிய அறிவிப்பு வெளியீடு!