திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான சாமி தரிசனம் டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட அர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் குலுக்கல் தேர்வுக்கு பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22 வரை மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட் பெறலாம். ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளையும், அதே சேவைகளுக்கு நேரில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் மட்டும் பெற அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.
அங்க பிரதட்சணம் செய்வதற்காம இலவச டோக்கன்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவானி அறக்கட்டளைக்கான ₹ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட்டுகள் பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கும், திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு செய்ய பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.
இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... 28 இணையதளங்கள் முடக்கம்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
பக்தர்கள் தங்கள் தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் : https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “இது எங்க ஏரியா உள்ள வர்றாத”.. திருப்பதி சாலையோரத்தில் ஹாயாக படுத்து ஓய்வெடுத்த சிறுத்தை...!