• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்து அமைப்பு, தர்கா நிர்வாகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் என்னென்னவென பார்க்கலாம்.
    Author By Amaravathi Thu, 04 Dec 2025 11:54:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupparamkundram case at madurai High court

    திருப்பரங்குன்றம் மலை உச்சி தீப தூணில் தீபமேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள வாதங்கள் என்னவென பார்க்கலாம்... 

    தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன் முதலில் வாதங்களை முன்வைத்தார். நேற்று சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தப்பட்டது; மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சி நடந்தது என்றும், மத்திய தொழில்பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு அளிக்க எப்படி உத்தரவிட முடியும்? என்றும் வாதிட்ட தமிழ்நாடு அரசு,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்த அன்றே, தண்டனை வழங்க இயலாது. இதனை சட்டமும் உறுதி செய்கிறது. இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தையும் தமிழ்நாடு அரசு முன்வைத்தது. 

    ஆர் எஸ் எஸ் ஊர்வலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்றம் தண்டனை வழங்கலாமே தவிர உத்தரவை வழங்க இயலாது என ஏற்கனவே நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு அரசு, பிரதான வழக்கு மேல்முறையீடு நிலுவையில் உள்ள போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி உடனடியாக எந்த முடிவு எடுக்க முடியாது என்றும், தனி நீதிபதி முன்கூட்டியே நிர்ணயித்து, இந்த வழக்கை கையாண்டிருப்பதாகவும் அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தது. 

    இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் மோதல் சம்பவம்... இந்து முன்னணி நிர்வாகி உட்பட 13 பேர் கைது...!

    காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர் பேரிக்காடு  உடைக்கப்பட்டுள்ளது அனைத்திற்கும் காட்சிகள் உள்ளது. இந்த உத்தரவு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி, மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல முயன்ற பின் கலவரம் எழும் சூழல் உருவானது. அதனை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு சட்ட ஒழுங்கை பாதுகாப்பு வகையில் தான் இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு மனுதாரர் தரப்பு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது

    தீபத்தூண் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபமேற்ற பயன்படுத்தப்படவில்லை. 1862 ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் இல்லாத ஒரு விசயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டிய தேவை இல்லை.  கார்த்திகை தீபம் ஒரு இடத்தில் மட்டுமே ஏற்றப்பட வேண்டும். 2 இடங்களில் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வீரா கதிரவன் வாதிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    மலை உச்சியில் உள்ளது தீபத்தூண்.கோவில் நிர்வாகம் சார்பில் நூறு ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்டு வருகிறது இதை உடனடியாக மாற்ற இயலுமா? என அரசு தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவு நகல் பதிவேற்றம் செய்யப்பட்டு சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னரே கோவில் நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது ஏன் தாமதம்? என இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது, அதற்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். 

    மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்க பட்டுள்ளனர் . மதப்பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது. தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. CISF நீதிமன்றத்தை பாதுகாக்கவே.  அவர்களை மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

    இதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால் தான் தனி நீதிபதி மாற்று ஏற்பாடாக மத்திய தொழிற் படை  பாதுகாப்பை செய்ய நேரிட்டது இந்து அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் நூறு வருடமாக ஏற்ற வில்லை என சொல்கிறார்கள் அது தவறு எங்கள் கலாச்சாரம் நூறு ஆண்டுகள் கிடையாது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என வாதிட்ட இந்து அமைப்பின் வழக்கறிஞர்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 மணிக்கு எடுக்கப்பட்ட போது, கோவில் நிர்வாகம் தரப்பில் யாரும் ஆஜராகி எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்றும், அரசுத்தரப்பில் முன் கூட்டியே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே நீதிபதி 6.05மணிக்கு வழக்கை எடுத்தார். காவல்துறையினர் போதிய பாதுகாப்பை அளிக்காத காரணத்தினாலேயே சி ஐ எஸ் எப் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டார் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்த ராம ரவிக்குமார் தரப்பு வாதங்களை முன்வைத்தது. 

    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா சார்பில், “கார்த்திகை தீபம் என்பது ஒரு இடத்தில் தான் ஏற்றப்படும் என்றும், 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் எப்படி செய்ய முடியும் என்றும், தீபத்தூண் என அழைக்கப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படவில்லை” என்றும் அடுக்கடுக்கான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

    இதையும் படிங்க: அதிகாலை முதலே அதிரடி மாற்றம்...!! - மலை மீது தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு... தொடரும் 144 தடை உத்தரவு... திருப்பரங்குன்றத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

    மேலும் படிங்க
    #BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!

    #BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!

    தமிழ்நாடு
    பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கவர்னர்கள் இடையூறு... ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

    பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கவர்னர்கள் இடையூறு... ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு
    தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!! இது எங்க போய் முடியப்போகுதோ..!!

    தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!! இது எங்க போய் முடியப்போகுதோ..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING: அவமானப் படுத்துறீங்களா? சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி... பரபரப்பு..!!

    #BREAKING: அவமானப் படுத்துறீங்களா? சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    டிரம்ப்பின் கிரீன்லாந்து கனவு..!! NORAD விமானங்களின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கிறதா..??

    டிரம்ப்பின் கிரீன்லாந்து கனவு..!! NORAD விமானங்களின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கிறதா..??

    உலகம்
    மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!

    மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!

    #BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!

    தமிழ்நாடு
    பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கவர்னர்கள் இடையூறு... ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

    பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கவர்னர்கள் இடையூறு... ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அவமானப் படுத்துறீங்களா? சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி... பரபரப்பு..!!

    #BREAKING: அவமானப் படுத்துறீங்களா? சட்டசபையை விட்டு வெளியேறிய ஆளுநர் ரவி... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    டிரம்ப்பின் கிரீன்லாந்து கனவு..!! NORAD விமானங்களின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கிறதா..??

    டிரம்ப்பின் கிரீன்லாந்து கனவு..!! NORAD விமானங்களின் பயணம் பதற்றத்தை அதிகரிக்கிறதா..??

    உலகம்
    மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!

    மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!

    தமிழ்நாடு
    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று: 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை!

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று: 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share