தமிழ்நாட்டின் ஆன்மிக மையமாகத் திகழும் திருவண்ணாமலை, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஒரு அற்புதமான ஒளி விழாவை அணிவகுத்து நிற்கிறது. கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் இந்தத் திருவிழா, லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னோடு இணைத்து, இருளைக் கடந்து ஒளியின் பெருமையைப் பாடுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் என்றாலே மெய்சிலிர்க்கும். தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அண்ணாமலையாருக்கு அரோகரா., உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் பின்னை பிளக்கும்.
கார்த்திகை தீபத்தின் வரலாறு, புராணங்களின் ஆழமான கதைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழ் பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாத பௌர்ணமியன்று, கிருத்திகா நட்சத்திரத்துடன் இணைந்து நிகழும் இந்த விழா, பத்து நாட்கள் நீடிக்கும் பிரஹ்மோத்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபத் திருவிழா கொண்டாட்டமாக டிசம்பர் 3 அன்று, மாலை 6:30 மணியளவில், திருவண்ணாமலையின் 2668 அடி உச்சியில் 30 அடி உயரமுள்ள பெரிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா தீபத்திற்கு திருவண்ணாமலை யின் மழை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மலையை அனுமதிக்கப்பட்டு மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பார்கள். ஆனால் பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் திருவண்ணாமலை வ உ சி நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு தெருக்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!
இதன் காரணமாக புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையினர் ஆய்வு செய்ததில் மலையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்தாண்டு மகா தீபத்திற்கு திருவண்ணாமலையின் மலை மீது பக்தர்கள் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அனுசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பொழிவும் தற்போது இல்லாத காரணத்தால் மகா தீபத்திற்கு பக்தர்கள் திருவண்ணாமலையின் மலையின் மீது ஏற அனுமதி வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அரோகரா... திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்... முக்கிய அப்டேட்..!