தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசு, மாநகராட்சிகளின் அடிப்படை சேவைகளில் ஒன்றான தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தது. ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ளும் வகையில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது. இந்த நடவடிக்கை தூய்மைப் பணிகளைத் தனியார் மையமாக்கும் முயற்சியின் முதல் கட்டமாகப் பார்க்கப்பட்டது.
இந்த டெண்டர் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் இந்த முடிவு தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று அஞ்சினர். தனியார் நிறுவனங்கள் பணியை ஏற்றுக்கொண்டால் ஊதியக் குறைப்பு, பணி நிரந்தரம் இல்லாமை, பாதுகாப்பு உபகரணங்கள் போதாமை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர்கள் வாதிட்டனர். ஈரோடு உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தப் போராட்டங்கள் பொதுமக்களிடையேயும் கவனத்தை ஈர்த்தன.

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி கட்சிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அவர்களின் குரல் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. கடந்த ஆட்சியிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோது எதிர்ப்பு எழுந்த நிலையில், புதிய அரசு இதே பாதையில் செல்வது சரியல்ல என்று அரசியல் தரப்புகள் சுட்டிக்காட்டின. தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக அரசுக்கு கோரிக்கை வைத்து, முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!
இந்த எதிர்ப்புகளின் பின்னணியில் தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது. தூய்மைப் பணிகளைத் தனியார் மையமாக்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்புக்கான டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது. இந்த முடிவு தொழிலாளர்களின் குரலுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. தூய்மைப் பணிகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: "சரித்திரம்"... ஒரு நிமிடம் கூட BREAK இல்ல..! பேரவை நேரலை ஒளிபரப்பில் சாதனை..!!