இந்தியாவின் இளம் தலைமுறை, ஜென் Z (18-24 வயது) மற்றும் டீனேஜர்கள், சமூக ஊடகங்களை தங்கள் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய பகுதியாக மாற்றியுள்ளனர். 2025-ல், 491 மில்லியன் சமூக ஊடகப் பயனர்களைக் கொண்ட இந்தியாவில், இளைஞர்கள் தினசரி சராசரியாக 2 மணி 28 நிமிடங்கள் இத்தளங்களில் செலவழிக்கின்றனர். கல்வி, பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் உள்ளடக்க உருவாக்கத்திற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. கூகுள்-கான்டார் ஆய்வின்படி, 91% ஜென் Z இளைஞர்கள் சமூக ஊடகங்களை செய்தி மூலமாகப் பயன்படுத்துகின்றனர், அதில் வீடியோத் தளங்கள் 88% பங்கு வகிக்கின்றன.

ப்யூ ரிசர்ச் மற்றும் ஸ்டாடிஸ்டா போன்ற அமைப்புகளின் தரவுகளின் அடிப்படையில், இந்திய இளைஞர்களிடம் அதிகப் பயன்பாட்டைக் கொண்ட டாப் 10 சமூக ஊடகங்களின் பட்டியல் இதோ. இந்தப் பட்டியல், இன்டர்நெட் பயனர்களின் பயன்பாட்டு சதவீதம் மற்றும் ஜென் Z சார்ந்த கவனத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதையும் படிங்க: 16 வயசு ஆகலயா..!! அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஆஸ்.,-வில் வந்தாச்சு புது ரூல்..!!
1. இளம் வயதினரால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்களின் பட்டியலில் முதல் இடத்தில் யூடியூப் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 1.1 பில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக சிறு நகரங்களில் பெண்கள். கல்வி வீடியோக்களும், பொழுதுபோக்கும் முக்கியம்.
2. இந்த பட்டியலில் 2ம் இடத்தில் டிக் டாக் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 800 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். குறுகிய வீடியோக்கள் மற்றும் டிரெண்டுகளால் இளைஞர்களை ஈர்க்கிறது.
3. 3ம் இடத்தில் இன்ஸ்டாகிராம் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 700 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரீக்களால், இது இளம் பெண்களின் (31.7% பயனர்கள்) இதயங்களை கைப்பற்றியுள்ளது. 72% ஜென் Z பயனர்கள் இங்கு வாடிக்கையாளர் சேவைக்காக தொடர்கின்றனர்.
4. 4ம் இடத்தில் வாட்சப் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 600 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
5. இந்த பட்டியலில் 5ம் இடத்தில் ஸ்னாப் சேட் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 400 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
6. இந்த பட்டியலில் 6ம் இடத்தில் ஃபேஸ்புக் வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 300 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். இளம் வயதினரிடம் 33% மட்டுமே, ஆனால் குழு உரையாடல்களுக்காக இன்னும் பிரபலம்.
7. 7ம் இடத்தில் Discord வலைத்தளம் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 250 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். விளையாட்டு மற்றும் கல்விக்காக டீன்களின் 28% பயன்படுத்துகின்றனர்.
8. இந்த பட்டியலில் 8ம் இடத்தில் டிவிட்டர் (x) சமூக வலைத்தளம் உள்ளது. 2025ல் மட்டும் சுமார் 150 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். 24 மில்லியன் பயனர்கள், ஆன Activists மற்றும் இளைஞர்களிடம் பிரபலம்.
9. இந்த பட்டியலில் 9ம் இடத்தில் Reddit சமூக வலைத்தளம் உள்ளது. 2025ல் மட்டும் சுமார் 80 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
10. இளம் வயதினரால் அதிகம் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் 'Pinterest' உள்ளது. 2025ல் மட்டும் சுமார் 60 மில்லியன் இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தப் பட்டியல், இளைஞர்களின் டிஜிட்டல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. 50%+ பயனர்கள் 34 வயதுக்குக் கீழ் உள்ளனர், ஆண்கள் 65.5% ஆதிக்கம். இருப்பினும், மனநலம், தனியுரிமை சிக்கல்கள் அதிகரிக்கின்றன. நிபுணர்கள், பெற்றோர்கள் கண்காணிப்பை வலியுறுத்துகின்றனர். 2025-ல், AI-அடிப்படையிலான உள்ளடக்கங்கள் இந்தத் தளங்களை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி, இளைஞர்களின் கைகளில்!
இதையும் படிங்க: இனி எந்த டீட்டெய்லும் மிஸ் ஆகாது..!! சென்சஸ்-க்கு புது செயலி..! மத்திய அரசு பக்கா ப்ளான்..!!