சென்னை திரிசூலம் பகுதியில் சிறையில் இருந்து வெளிவந்த நபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சமீப நாட்களாக இரட்டை கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் திரிசூலம் பகுதியில் நிகழ்ந்த இந்த இரட்டை கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டு பேர் கொண்ட கும்பல் இருவரை வெட்டி சாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை சரமாரியாக மர்ம கும்பல் ஒன்று வெட்டி சாய்த்துள்ளது. திரிசூலத்தில் உள்ள குடிசை வீட்டுக்குள் புகுந்த எட்டு பேர் கொண்ட கும்பல் 17 வயது சிறுவன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை வெட்டி கொன்றுவிட்டு தப்பிய உள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முடிச்சூரை சேர்ந்த 20 வயதான ஆறுமுகம் என்பவர் புழல் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். மணி என்பவரது வீட்டில் சிறையிலிருந்து வெளிவந்த ஆறுமுகம் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் வெறியுடன் வந்த கும்பல் ஆறுமுகம் மட்டுமல்லாது உடன் இருந்த சிறுவனையும் வெட்டிக் கொலை செய்துள்ளது.
இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை... நேபாள நாட்டு பணிப் பெண்ணை தட்டி தூக்கிய போலீஸ்..!!
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பாகவும் எதன் காரணமாக இந்த கொலை நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து வெளிவந்த நபரை கொலை செய்திருப்பதால் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. திரிசூலம் பகுதியில் நடந்துள்ள இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!