அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கும் வகையில் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு தகுதியானது என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜனவரி 9, 2026) வெள்ளை மாளிகையில் எண்ணெய் மற்றும் வாயு நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் கூறியதாவது: “மக்களுக்கு நான் பிடித்திருந்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நான் 8 பெரிய போர்களை நிறுத்தியுள்ளேன். சில போர்கள் 25 ஆண்டுகளாகவும், சில 36 ஆண்டுகளாகவும் நீடித்தவை.
இந்தியாவும் பாகிஸ்தானும் போராக மாறும் நிலைக்கு சென்றபோது, ஏற்கனவே 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் நான் அதை நிறுத்தினேன். ஒவ்வொரு போரை நிறுத்துவதற்கும் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். வரலாற்றில் என்னை விட அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் வேறு யாருமில்லை” என்றார்.
இதையும் படிங்க: நோபல் பரிசு ட்ரம்புட்ன் பகிர ஆசை!! வெனிசுலா அதிபர் கைதான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம்!
மேலும் அவர் தொடர்ந்து கூறியது: “கடந்த 2025-ல் வாஷிங்டன் வந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் என்னை சந்தித்தபோது, அணுஆயுதம் கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையே போர் நடக்காமல் தடுத்ததற்காக லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

ஆனால் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா? அவர் ஒன்றுமே செய்யவில்லை. அவருக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் என்று எனக்கு இன்றும் புரியவில்லை” என்றும் கூறினார்.
டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு சர்வதேச மோதல்களை தடுத்ததாகவும், உலக அமைதிக்கு பெரும் பங்களிப்பு செய்ததாகவும் தன்னை புகழ்ந்து கொண்டார். குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை மோதல் உச்சத்தில் இருந்தபோது தனது தலையீடு மூலம் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் டிரம்பின் ஆதரவாளர்கள் இதை அவரது தைரியமான பேச்சு என்று பாராட்டினாலும், மறுபுறம் விமர்சகர்கள் இது தன்னம்பிக்கை மிகைப்படுத்தல் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேமுதிக பக்கா ப்ளான்!! கூட்டணி அறிவிக்காததன் அசத்தல் பின்னணி! யாருக்கு கல்தா?!