தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். கரூர் சம்பவம் நடந்த 40 நாட்கள் கழித்து விஜய் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டி விமர்சித்து இருந்தார். பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டார்.
கரூர் விவகாரம் குறித்த சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தை கக்கி உள்ளார் எனவும் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புடன், நேர்மையில்லாமல், குறுகிய மனதுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பொய் எனவும் தெரிவித்தார்.
வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறை சட்டம் மற்றும் சக்தியின் துணை மூலம் துடைத்தெறிய போகிறோம் என்று கூறிய விஜய், உச்சபட்ச அதிகார மயக்கத்தில் இருந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். விஜயின் பேச்சை பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சம்பிரதாய பத்திரிகையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் தாமதம் ஏன்? என்ன நடக்குது முதல்வரே..? சந்தேகத்தை கிளப்பும் இபிஎஸ்..!

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி ஏற்படும் என்றும் மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தம் அளிப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று கூறினார். இது பன்ற பைக் ரேஸ் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் இளசுகளுக்கு ஆபத்து என்பது புரியாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுகிறது.
இதையும் படிங்க: கடிதம் மட்டும் போதுமா? நடவடிக்கை எடுங்க ஸ்டாலின் ஐயா... சீமான் வலியுறுத்தல்...!