திருச்சி மண்ணச்சநல்லூரில் தனக்கு ரூ.8000 கூப்பன் மாதிரி வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது, தி.மு.க-வினர் தன்னை ஆபாசமாக பேசி தாக்கியதாக சிந்துஜா என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசி தாக்கிய தி.மு.க-வினரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி - லால்குடி சாலையில் சிந்துஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறினார். மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு எனவும் தெரிவித்தார். சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? என்றும் உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? எனவும்
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்புக்கு விஜய் கண்டனம்..!! மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கை..! குற்றச்சாட்டு..!!
மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? என்றும் கேட்டுள்ளார். மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார் என்றும் இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!