தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. மதியழகனை இரண்டு நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மதியழகன் மற்றும் பவுன்ராஜ்க்கு நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது இருவருக்கும் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் கட்சியின் மறுபக்கம்... வீட்டிற்குள் கஞ்சா பதுக்கிய தவெக நிர்வாகி கைது...!
எனவே இருவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்படுமா அல்லது இருவரும் விடுதலை செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் ஜாமினில் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!