தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் வெற்றி பெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்தப் புதிய கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசு அமைத்து சில நாட்களுக்குள் தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்த வெற்றி தமிழ்நாட்டின் அரசியல் சமன்பாட்டை மாற்றியமைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், த.வெ.க தனியாக பெரும்பான்மையை எட்டவில்லை. எனினும், காங்கிரஸ், விசிக், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்க விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆளுநர் உத்தரவுப்படி மே 13-க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலை உருவானது. இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் த.வெ.க அரசுக்கு 144 வாக்குகள் ஆதரவாக வாக்களித்த நிலையில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூய சக்தி இல்லை.. முகமூடியை விலக்கினார் CM விஜய்..!! திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் விளாசல்..!!
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் விஜய் கூறினார். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!