நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்ட அனல் பறக்கும் அரசியல் பரபரப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு காணப்பட்ட பகுதி. இன்று காலை முதல் ஒருவித அமைதியான சூழலுக்கு மாறியிருக்கிறது.
நேற்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணிக்குள் வெறும் 2 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு அரசியல் களமே தலைகளாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தவெக தலைவர் விஜய் தலைமையில் பட்டினம்பாக்கம் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனை முடிந்த பிறகு பட்டினப்பக்கம் இல்லத்திலிருந்து நீலாங்கரை இல்லத்தை நோக்கி விஜய் வாகனம் தனியாக, அதாவது கான்வாய் வாகனம் இல்லாமல் தனியாக சென்றது. அதற்கு முன்பாக மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கான்வாய் வாகன பாதுகாப்புடன் தான் விஜய் சென்றிருந்தார்.
அதன் பின்பு பட்டினம்பாக்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு கான்வாய் வாகனம் இல்லாமல் தனியாக விஜய் வாகனம் சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது. நேற்று வரை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி கான்வாய் வாகனங்கள், தடுப்புகளுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை ஒட்டுமொத்த களநிலவரமும் மாறி, விஜய் வீட்டின் முன்பிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதோடு, அந்த சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது
இதையும் படிங்க: என்ன ஆச்சு...?? - தவெக புயலில் சிக்கித் தவிக்கும் திருமா... திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
பெரும்பான்மை குறித்த தெளிவான சூழல் இல்லாத காரணமாக தற்காலிகமாக கான்வாய் வாகனங்கள் வேண்டாம் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை 11 மணி அளவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்ன?, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!