உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்ய சென்றுள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலினை கைது செய்யச் சென்ற போலீசார் உடன் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்குவாதம் செய்து உள்ளார். மேலும் உதயநிதியின் வீட்டிற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் வருகை தந்துள்ளார். உதயநிதியை கைது செய்ய சென்றபோது போலீசார் அவரது மனைவி கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் உதயநிதி ஸ்டாலினின் வீட்டை நோக்கி திமுகவினரும் படையெடுத்து வருகின்றனர். என்ன வழக்கு என்றும் யார் புகார் கொடுத்தது என்றும் சரமாரி கேள்விகளை போலீசாரிடம் எழுப்பினர். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உதயநிதி என் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஆபாசமாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்து தஞ்சை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து செல்கிறோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கைதாகுவதற்கு உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!
உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக அவசர முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய முறையீடு ஏற்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இன்று பிற்பகல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!