பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், சரியான பதிலடி வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் இந்தியா நடவடிக்கையைத் தொடங்கியது. இதன்படி நேற்று அதிகாலை வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். இந்நிலையில், இந்தியாவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியா - ஈரான் இடையிலான 20ஆவது கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி இந்தியாவுக்கு வந்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். பின்னர் ஜெய்சங்கர் கூறுகையில், “கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாக்., போட்ட ஒரே ஒரு போன் கால்... இந்தியாவை நோக்கி அலை அலையாய் படையெடுக்கும் துருக்கி கப்பல்கள்..!

ஆனால், பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும். இதில் எந்தவித ஐயமும் இல்லை. அண்டை நாடு என்கிற காரணத்தால், இச்சூழ்நிலையை நீங்கள் (பாகிஸ்தான்) நன்றாக புரிந்து கொள்ள முடியும்.” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: படம் போட்டு காட்டிய இந்தியா.. ஆதாரத்தோடு சிக்கிய பாக்., இப்போ என்ன சொல்ல போறீங்க?