அமெரிக்கா தற்போது வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த பிறகு, அந்நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெனிசுலாவில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை அமெரிக்கா சுத்திகரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “வெனிசுலாவில் இருந்து தினசரி 50 மில்லியன் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை எடுத்து வருகிறோம். அதை அமெரிக்காவில் சுத்திகரித்து விற்கிறோம். இதன்மூலம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கும் உதவுகிறோம். நாம் எடுத்ததை மீண்டும் நாமே விற்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிரிஸ்டோபர் ரைட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். “வெனிசுலாவில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயை அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.
இதையும் படிங்க: நோபல் பரிசு ட்ரம்புட்ன் பகிர ஆசை!! வெனிசுலா அதிபர் கைதான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம்!

குறிப்பாக இந்தியாவுக்கும் இந்த எண்ணெயை விற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எல்லாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று. கடந்த காலங்களில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் சமீபத்தில் வரிவிதிப்பு மற்றும் பிற காரணங்களால் அமெரிக்க எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்தது. இந்த சூழலில், தற்போது அமெரிக்கா தானாக முன்வந்து வெனிசுலா எண்ணெயை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய வாய்ப்பு இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விலை குறைவாக பெறுவதற்கும் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: வெனிசுலாவை தாக்க போதைப்பொருள் காரணமில்லை! அமெரிக்காவின் சீக்ரெட் ப்ளான்!! கொட்டிக்கிடக்கும் வளம்!