இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில வர்த்தக உறவு சுமூகமாக போய்ட்டு இருந்த நேரத்துல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டிருக்கார். இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிச்சு, இன்னொரு 25% கூடுதல் வரி போட்டு, மொத்தமா 50% வரி ஆக்கிட்டார்.
இந்த புது வரி இம்மாதம் கடைசி வாரம் அமலுக்கு வருது. இதுக்கு காரணம்? இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குறது ட்ரம்புக்கு பிடிக்கலையாம். உக்ரைனுக்கு எதிரா போரில் ஈடுபட்டு இருக்குற ரஷ்யாவை ஆதரிக்கிற மாதிரி இந்தியா நடந்துக்குதுன்னு ட்ரம்ப் கோபமா இருக்கார்.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாங்க. இரு நாட்டு வர்த்தக குழுக்கள் அடிக்கடி சந்திச்சு, இம்மாதம் கடைசியில ஒரு முக்கியமான பேச்சு நடத்த திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, ட்ரம்போட இந்த அதிரடி வரி முடிவு, எல்லாத்தையும் கவுத்துடுச்சு.
இதையும் படிங்க: இந்தியா மேல போர் நடத்துங்க.. நாங்க பார்த்துக்குறோம்!! பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்த அல் - குவைதா ஆதரவு பெண்!
இப்போ ட்ரம்ப், “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குறதை இந்தியா நிறுத்துற வரை, எந்த வர்த்தக பேச்சுவார்த்தையும் கிடையாது”ன்னு அடாவடியா அறிவிச்சிருக்கார். இது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு!

இந்தியா இதுக்கு வளையாம, கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்கு. “எங்களோட வர்த்தகம் சர்வதேச சந்தை நிலவரத்தையும், 140 கோடி இந்தியர்களோட தேவையையும் பொறுத்து இருக்கு. இதுல மூணாவது நாடு தலையிடுறதை இந்தியா சகிச்சுக்காது!”ன்னு மத்திய அரசு திட்டவட்டமா சொல்லியிருக்கு.
பிரதமர் மோடியும் இதுல அசராம, “விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்களோட நலனுக்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் இந்தியா தயார். அமெரிக்காவுக்கு நாங்க அடிபணிய மாட்டோம்!”ன்னு அதிரடியா அறிவிச்சிருக்கார்.
ட்ரம்போட இந்த அடாவடி, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக அரங்கத்துலயும் பேசப்படுது. இந்தியா சொல்றது என்னன்னா, “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குற எல்லா நாட்டுக்கும் ட்ரம்ப் இப்படி வரி போடலையே! இந்தியாவை மட்டும் ஏன் குறி வைக்குறீங்க?” இதோட, அமெரிக்காவே ரஷ்யாவிடம் இருந்து நிறைய பொருட்களை வாங்குறதை இந்தியா சுட்டிக்காட்டி, “இது முன்னுக்குப் பின் முரணா இருக்கே!”ன்னு கண்டனம் தெரிவிச்சிருக்கு.
இந்த 50% வரி இந்தியாவோட ஏற்றுமதி துறையை, குறிப்பா ஜவுளி, மருந்து, ஐடி சேவைகளை பாதிக்கலாம். இந்தியா இப்போ மாற்று வழிகளை தேடி, உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்தவும், மத்த நாடுகளோட வர்த்தகத்தை விரிவாக்கவும் திட்டமிடுது. இம்மாதம் கடைசியில நடக்க வேண்டிய வர்த்தக பேச்சு இப்போ ரத்து ஆகி இருக்குறதால, இரு நாடுகளுக்கும் இடையில புது பதற்றம் உருவாகியிருக்கு.
இதையும் படிங்க: காசாவை ஜெயிச்சாலும் இஸ்ரேல் கூட சேர்க்க மாட்டோம்!! நெதன்யாகு புதுரூட்..! மாஸ்டர் ப்ளான்..