1978 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக வைகோ பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழர் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடங்கும் முழங்கியவர் வைகோ. 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வந்துள்ளார். தொழிலாளர் தினமான மே தினத்திற்கு அரசு விடுமுறை வாங்கி கொடுத்தவர் இவர். பிரதமர் முன்னிலையில் ஹிந்தி வார்த்தைகள் இருந்த பேப்பர்களை கிழித்து எரிந்தவர். வைகோ தனது முதல் உரையிலேயே நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு குறித்து பேசியுள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்களின் நன் மதிப்பை பெற்றவர். வாஜ்பாயின் வளர்ப்பு மகன் வைகோ என்று பேசும் அளவிற்கு மதிப்பை பெற்றவர்.
வைகோ 1978 முதல் 1996 வரை மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2019-இல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைகோ 1998 மற்றும் 1999-இல் சிவகாசி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைகோ, நாடாளுமன்றத்தின் சிங்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் புலி என்று அழைக்கப்பட்டவர். அவரது சிறப்பான பேச்சுத் திறமையால், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தினார்.

30 ஆண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று வைகோ ஓய்வு பெறுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ உரையாற்றினார். தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் வைகோ அப்போது நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தனது பணிகளை வைகோ நினைவு கூர்ந்தார். தன்னை முதன்முதலாக மாநிலங்கள் அவைக்கு அனுப்பியவர் கலைஞர் என்று நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.. வைகோ ஆவேசப் பேச்சு..!
இதனிடையே, வைகோ, திருச்சி சிவா, முகமது அப்துல்லா, சண்முகம் உள்ளிட்டோரும் இன்று ஓய்வு பெறுகின்றனர். மேலும் ஓய்வு பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிகளுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பதறி அடித்து கொண்டு திருப்பூரில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓடிய மதிமுகவினர்! நடந்தது என்ன?