தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையில் முதலமைச்சர் விஜயை ‘கோட் சூட் அணிந்த விவசாயி’ என்று குறிப்பிட்டதை தொடர்புபடுத்தி அவர் விமர்சனம் செய்து உள்ளார். கோட் சூட் போட்ட விவசாயி முதல்வரே என்று கூறினார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500 வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..? என்று கேட்டார். 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு...? விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000 என்னாச்சு? என்றும் கேள்வி எழுப்பினார். சிம்பிளா சொல்லணும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

“மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!” எனக்கு குறிப்பிட்டு தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அப்படித்தான் இந்த தவெக அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!
தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் விதைப்புக் கால நிதியுதவி ஆகியவை இந்தப் பட்ஜெட்டில் இடம்பெறாததை சுட்டிக்காட்டி அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் வினோத் முதலமைச்சரை விவசாயி என்று சிறப்பித்ததை வைத்து, உண்மையான விவசாயிகளின் நலன் கவனிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!