தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தற்போது திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரச்சார வாகனத்தில் மரக்கடை நோக்கி புறப்பட்டது. அப்போது பிரச்சார வாகனத்தை முழுக்க தொண்டர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வாகனம் நகர முடியாதபடி தொண்டர்கள சூழ்ந்திருக்கக்கூடிய நிலையில், அப்பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒரு சிலர் மயக்கமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், தனது பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக தயாரித்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் ஏறி மரக்கடை நோக்கி புறப்பட்டார். முதலில் விஜய் விமான நிலையத்தை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு தொண்டர்கள் அவரது வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் காரணமாக விஜயினுடைய அந்த பரப்புரை வாகனம் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஊர்ந்து செல்லக்கூடிய நிலைதான் ஏற்பட்டது. மிக கடுமையான கூட்ட நெரிசல் விமான நிலையத்திலேயே ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் தொண்டர்கள் உட்பட ஒரு சிலர் மயங்கி விழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் விஜயை பார்க்க வேண்டும் என்ற உற்சாக மிகுதியில் தொண்டர்கள் அங்கும் இங்கும் ஓடினர், தடுப்புகளைத் தாண்டி குதித்தனர். இதனால் திருச்சி விமான நிலையமே போர்க்களமானது. அங்காங்கே காலணிகள் சிதறிக்கிடக்கின்றன. இந்த பரபரப்பிற்கு இடையே மயங்கி விழுந்த பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் சக தொண்டர்கள் மீட்டு, தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர்.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல்... திடீர் கடையடைப்பு... விஜய் வருகையால் திணறும் திருச்சி....!
இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளும், விமான நிலையத்திலிருந்து வெளியேறக்கூடிய பயணிகளும் போக்குவரத்து நெருக்கலில் சிக்கியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட தொண்டர்களினுடைய கூட்டத்தை கட்டுப்படுத்துவது என்பது ஒரு இயலாத காரியமாக இருக்கிறது. ஏனென்றால் தொண்டர்களின் எண்ணிக்கை என்பது மிக அதிக அளவில் இருப்பதன் காரணமாக உள்ளது. தற்போது வரை விஜய் சுற்றுப்பயண வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் அவர் மரக்கடை பகுதிக்குச் சென்றடைய அதிக நேரமெடுக்கும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடவுளே விஜய்... ஆள்பவரே விஜய்... மலைக்கோட்டையை அதிர விடும் தவெக தொண்டர்கள்...