இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் குறித்து வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வரும் 19ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றபின், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இதற்குப்பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல்நடத்தி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? 10 நிமிடம் நையப்புடைத்த போலீசார்.. அரை நிர்வாணமாக்கி ரோட்டில் ஊர்வலம்..!
இதையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லைப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றது, இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீட்டால் போர் நிறுத்தம் உடன்பாடானது.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் பதற்றமான சூழல், போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது எப்படி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 19ம் தேதி கூடுகிறது. இந்த குழுமுன் ஆஜராகும் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, சம்பவங்கள் குறித்து விளக்கம் அளிப்பார்.
இந்தியாவின் தற்போதைய வெளிநாட்டு கொள்கைகள், அதன் நிலைப்பாடுகள், பாகிஸ்தானுடன் வெளியுறவுக்கொள்கையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் மிஸ்ரி நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கம் அளிப்பார்.

இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவ நடவடிக்கையின் இயக்குநர்கள், போர் நிறுத்தத்தை செய்ய ஒப்புக்கொண்டனர். இந்த போர் நிறுத்தம் தரைவழி, வான்வெளி, கடல்வெளி ஆகியவையும் அடங்கும் என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்திருந்தார். இது குறித்தும் மிஸ்ரி, நாடாளுமன்றக் குழுவிடம் சுருக்கமாக தெரிவிப்பார்.
வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இருக்கிறார். இவர் தலைமையிலான குழுவிடம் நேரில் மிஸ்ரிஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார். போர் நிறுத்தம்செய்ய இரு நாடுகளும் எப்போது ஒப்புக்கொண்டன, எந்தக் கட்டத்தில் ஒப்பந்தம் முடிவானது, போர் நிறுத்தம் ஏற்பட்டபின் எல்லையில் நிலைமை எப்படி, வெளியுறவுக்கொள்கையில் போருக்கு ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து மிஸ்ரியிடம் விளக்கம் கேட்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!