திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் போலி முகவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழு மாநிலத்திலும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வந்தனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிந்தது.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வந்தது. பல தொகுதிகளில், குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், பெண் வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் பங்கேற்று வந்தனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூர்-ல இருந்து வந்தும் ஓட்டுப் போட முடியல..! ஆதங்கத்தை கொட்டிய குடும்பத்தினர்..!!
அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மாலை 6:00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கீழ்ப்பாலூரில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலி முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் தொகுதியில் கள்ள ஓட்டு.? வாக்களிக்க வந்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!