மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாக கூறியதற்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வக்பு திருத்தச் சட்டத்தின் படி புதிய நியமனங்கள் கூடாது என்றும் இந்த மசோதாவிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு வாதத்தில் திருப்தி இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கெடு விதித்த மத்திய அரசு..! இந்தியாவை விட்டு வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்..!

இந்த நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. வரும் மே 15 வரை தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கு விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் , இனி இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி. ஆர் கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மன்னிக்க முடியாத குற்றம்.. என்ன செய்யுது மத்திய அரசு? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!