காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீதான பதிலடி தாக்குதலை இந்தியா முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மே 7ஆம் தேதியான இன்று போர்க்கால உத்திகை நடத்த மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்ட இருந்தது. அதன்படி நாடு முழுவதும் என்று போர்கால ஒத்திகை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கியது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! இந்திய ராணுவ இணையதளம் மீது பாக். சைபர் அட்டாக்..!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மாலை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் தீவிர சோதனை..!