மேற்கு, வடக்கு எல்லைகளில் உள்ள நகரங்களில் உள்ள இராணுவ வசதிகளைத் தாக்க பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் முயற்சித்தது. இதனை அடுத்து இந்தியா எதிர் தாக்குதலைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது அரசு மாநிலத்திற்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ''அங்கீகரிக்கப்படாத ட்ரோன்களைக் கண்டறிந்து, கண்காணிக்க, நடுநிலையாக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாப் ஏற்கனவே அத்தகைய அமைப்புகளை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பஞ்சாப் பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. எங்களிடம் ஆறு எல்லை மாவட்டங்கள் உள்ளன. நாங்கள் எங்கள் சொந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை வாங்குவோம். எல்லைப் பாதுகாப்புப் படையும் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படை ஏற்கனவே ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் அதிகமாக வாங்கி பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உதவுவோம். ட்ரோன்கள் எங்கள் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. அவை வீழ்த்தப்படும். பஞ்சாப் இந்தியாவுடன் நிற்கிறது" என்று மான் கூறினார்.
இதையும் படிங்க: பூனைக்குட்டி ஏன் பிளைட் பிடிச்சி டெல்லிக்குப் போச்சு... எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்த திமுக அமைச்சர்!

எல்லையில் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் பகவந்த் மான் இன்று அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை அழைத்திருந்தார். சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சதக் சுரகேயா படையால் சாலைகளில் உடனடி உதவி கிடைக்கும் 'ஃபரிஷ்டே திட்டம்' போர், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.

எல்லைப் பகுதிகளின் துணை ஆணையர்கள், தாசில்தார்களுடன் அரசு தொடர்பில் இருக்கிறது. நாங்கள் இராணுவத்துடன் ஒருங்கிணைப்போம். பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. எந்த வதந்திகளையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. வயல்களில் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பஞ்சாபியர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. அவர்கள் எப்போதும் நாட்டோடு உறுதியாக நிற்கிறார்கள். பஞ்சாப் மூவர்ணக் கொடியையும் அதன் நீர்நிலைகளையும் பாதுகாக்கும். நிலைமையை நாங்கள் சிறப்பாகச் சமாளிக்க எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து காலியாக உள்ள பதவிகளையும் நிரப்பியுள்ளோம்" என்று பகவந்த் மான் கூறினார்.
இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்..! சுக்கு நூறாக்கிய இந்தியா.. திக் திக் நிமிடங்கள்.. விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!