பீகாரில் உள்ள காயா பகுதியை சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குடும்ப வன்முறை என்பது குடும்ப உறுப்பினர்களிடையே நிகழும் உடல், மன, பொருளாதார, பாலியல் அல்லது உணர்வு ரீதியான துஷ்பிரயோகங்களைக் குறிக்கிறது. இது மனைவி, கணவர், குழந்தைகள், முதியவர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு எதிராக நிகழலாம். பீகாரில் நடந்த நாக்கை கடித்து விழுங்கிய சம்பவம் தீவிரமான நிகழ்வுகள் குடும்ப வன்முறையின் ஒரு வடிவம்.
பீகார் மாநிலம் கயா பகுதியை அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடைய வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வாலிபர் மனைவியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அந்தப் பெண் தனது கணவனை அடித்து கீழே தள்ளி உள்ளார். பிறகு கணவனின் மேலே உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கொடூரமாக கடித்து மென்று விழுங்கி உள்ளார்.

நாக்கு துண்டானதால் வலியில் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பீகாரில் ரோடு ஷோவின்போது நேர்ந்த சோகம்..!! பிரசாந்த் கிஷோருக்கு என்ன ஆச்சு..??
பின்னர் இருவரையும் சமாதானம் செய்ததுடன் வலியில் துடித்துக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வாலிபரின் உடலில் இருந்து ரத்தம் அதிகளவு வெளியேறியதால் அவர் ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் நாக்கை கடித்து துப்பிய மனைவியின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: எனக்கு என் மாமா தான் வேணும்.. 55க்கு ஆசைப்பட்டு கணவனை தீர்த்துக்கட்டிய 20 வயது இளம்பெண்..!