சமீப காலங்களில், இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது, இது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே பொதுவாக ஏற்பட்ட மாரடைப்பு, இப்போது இளைஞர்களையும் பாதிக்கிறது. இதற்கு மரபணு காரணங்கள், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தீவிர உடற்பயிற்சி போன்றவை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் (NIH) ஆய்வின்படி, இதயத்தின் மின்சார அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள் திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன. மரபணு பிரச்சனைகள், அதிகப்படியான எரிசக்தி பானங்கள், நீரிழப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். மன அழுத்தம் மற்றும் தீவிர உடற்பயிற்சியின்போது இளைஞர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: காதல் கணவரை பிரியும் சாய்னா நேவால்! 7 ஆண்டுகள் மணவாழ்க்கை கசக்க காரணம் என்ன?
இந்நிலையில் ஐதராபாத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் ராகேஷ் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதைபதைப்பூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கோத்தபள்ளி பகுதியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில், 25 வயதான ராகேஷ் என்ற இளைஞர் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
https://x.com/i/status/1949743364460413055
உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில், சிறப்பாக விளையாடி வந்த ராகேஷ், திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதினரிடையே மாரடைப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள், இளைஞர்கள் தவறாமல் உடல் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இதய ஆரோக்கியத்தை பேண, சீரான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இதய நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால பரிசோதனைகள் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க உதவும்.
இதையும் படிங்க: ஆளுநர் பின்னால ஒளிஞ்சிக்கவா உள்துறை அமைச்சர்? கௌரவ் கோகாய் சரமாரி கேள்வி