திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அமைத்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: நாதக நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்... ஆட்சி மாறியுமா?.. சீமான் கொந்தளிப்பு..!
தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: பரந்தூர் சர்ச்சை..! என்ன இரட்டை வேடமா..? தவெக அரசை குறிவைத்த சீமான்!