தென்காசி என்.டி.ஏ. ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் படம் மிஸ்ஸிங். இதனால் கடுப்பாகி போன பாஜகவினர் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகதத்தில் 5 வருடகால திமுக ஆட்சியில் அதிகரித்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதாகக்கூறி தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக் கூட்டனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தென்காசியில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் கூட்டணி கட்சித் தலைவரான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் படம் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க: மிருகங்களை தீனிப் போட்டு வளர்த்த திமுக..!! சுவடே தெரியாம தூக்கி எறியப்படும்..! தமிழக பாஜக உறுதி..!!
இதனால் கடுப்பான பாஜக தொண்டர்கள் சற்று தள்ளி தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவசரம் அவசரமாக நயினார் நாகேந்திரன் படம் மட்டும் தனியாக தயார் செய்யப்பட்டு பேனரில் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவினர் பாஜகவினரை அழைத்ததும் அவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதிலேயே அதிமுக பாஜக கூட்டணி கட்சியினுடைய ஒருமித்த கருத்து இல்லை . இவர்களை வைத்துக் கொண்டு எப்படி தேர்தல் பணிகளை மேற்கொள்வது என்று கூட்டணி கட்சியினர் வேதனை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு வெற்றி..!! கீழடி அறிக்கையை வெளியிட வைப்போம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!