மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் மூலம் தொடர்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றைய முன்தினம் தமிழ்நாடு வந்ததால் அவரை சந்திப்பதற்காக மூன்று தினங்கள் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஐந்து விளக்கு பகுதியில் மீண்டும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார். காரைக்குடி வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாம் சந்தித்தால் நாம் சென்று கதவை தட்டுகிறோம் என்று கூறுகிறார்கள், பிரதமர் மோடி நேற்று முன்தினம் வந்தார் எத்தனை பேர் சென்று கதவை தட்டினார்கள். அப்படியே வரிசையில் நின்று கதவை தட்டினார்கள் அப்படி தட்டவில்லை என்றால் கதை முடிந்துவிடும்... அப்படி அச்சத்தோடு சென்று இத்தனை பேர் போய் எதற்கு கதவை தட்டினீர்கள். நாங்கள் முறையாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழ்நாடு பிரச்சனைகளை சொல்கிறோம் அவர்கள் சில பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். நீங்கள்தான் அங்கு போகவே மாட்டீர்களே.
இன்று பாஜக என்றால் கசக்கிறது ஏதாவது பிரச்சனை என்று வந்தால் ஓடி சென்று கதவை தட்டுகிறீர்கள் இது நியாயமா? ,2001ல் திமுக பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டது என் பக்கத்தில் இருக்கக்கூடிய எச். ராஜா கூட போட்டியிட்டார். அப்போது பாஜக அதே கட்சி தானே. இன்றும் பாஜக அதே பெயரில் தான் இருக்கிறது. இன்னும் எச். ராஜா பாஜகவில் தான் இருக்கிறார். அவர்கள் எல்லாம் கூட்டணி வைத்தால் நல்லது நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி பாஜக என்று கூறுகின்றனர். இது கேவலமாக இல்லையா இது ஜனநாயக நாடு.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் 100% வெற்றி.. இதுதான் இந்திய ராணுவத்தின் பலம்.. பிரதமர் மோடி பெருமிதம்..!!
நீங்கள் அரசியல் செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அந்தந்த கட்சிகள் கூட்டணி வைப்பார்கள். அப்புறம் ஏன் தவறான கருத்தை அவதூறான கருத்தை பரப்பி அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சிக்கிறது அது ஒரு காலமும் நடக்காது.
மக்கள் விழிப்புணர்வோடு இருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். எங்களைப் பொறுத்தவரை எங்களின் கூட்டணி அதிமுக பாஜக பலம் வாய்ந்த கூட்டணி. எங்களது கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ்நாட்டில் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இதையும் படிங்க: விமானத்தில் வந்த பொய்கள்..! பணமதிப்பு ஒன்னா? பிரதமரை சரமாரியாக சாடிய திமுக..!