அதிமுக கழக கொடியினை பயன்படுத்த தடை செய்ய வேண்டும், பொய்யான செய்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர் கோ.குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அதிமுக ஒன்றிய கழக செயலாளர்
கோ.குமார். கட்சி நிர்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோருடன் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். பின்னர் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் மீது புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்கு துரோகம் செய்ததற்க்காக, கடந்த 2021 ஆம் ஆண்டு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பி.எம்.நரசிம்மன் நீக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில நாட்களாக ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அஇஅதிமுக கிளை கழகநிர்வாகிகளை தொடர்புகொண்டு கட்சியில் அவரை ஏற்றுக்கொண்டதாக கிராமம் கிராமமாக தவறானதகவலை பரப்பி கழகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் கழகக் கொடிகளை நட்டு நிர்வாகிகளை சந்தித்து நிகழ்ச்சிகளை நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வித்திடுகிறார். இதனால் அதிமுக கழக கொடியினை பயன்படுத்த தடை செய்து, கழகத்தில் இணைந்ததாக பொய்யான செய்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஏற்படுத்தி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.கே.பேட்டை காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஓரே நேரத்தில் அதிமுகவினர் 30க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தலைமைப் பண்பு இல்லைன்னா தோல்வி நிச்சயம்... எடப்பாடியை வசைப்பாடிய ஓபிஎஸ்!
இதையும் படிங்க: இப்படி ARREST பண்ண குண்டர்களா? நக்சலைட்டுகளா? இன்னும் எட்டு மாசம் தான்.. கதை க்ளோஸ்! EPS ஆவேசம்..!