தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுகாவை மீறி அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. எனவே ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் தற்பொழுதுவரை கோரிக்கை மணுவை கொடுத்து வரும் நிலையில், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மேலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என ஆளுநர் மாளிகை தவெகவிற்கு கட் அண்ட் கறாராக தெரிவித்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தனது சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் இருக்கக்கூடிய பூரணாங்குப்பம் அடுத்த பொதுக்குப்பம் பகுதியில் இருக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி அந்த சொகுசு விடுதியில் தான் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ந்த ஆலோசனையில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான கையொப்பமும் பெற்று மீண்டும் சென்னைக்கு திரும்பினார். இதனால் அதிமுக எம்.எ;ல்.ஏ.க்கள் நேற்று மதியமே சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓரங்கட்ட, ஒதுக்க நினைத்தால் நாங்களே மைய்யம் என்பதை நிரூபிப்போம்..! வன்னியரசு சூசகம்..!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆளுநர் இன்னும் வந்து அழைப்பு விடுக்காதன் காரணமாக டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தார். இன்று மதியத்திற்கு மேல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னை திரும்புவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில், தற்போது அவசர அவசரமாக அதிமுக தலைமை அழைப்பின் பெயரில் அதிகாலையிலே தற்போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக சென்னைக்கு புறப்பட தயாராகியுள்ளனர். தங்களது வாகனம் மூலமாக நேரடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக வைத்து இங்கு ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ஏனென்றால் இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கழகத்திற்கு விலை போயிடக்கூடாது என்பதற்காகவும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்க்ள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல சிவி சண்முகத்திற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வந்து கருத்து மோதலானது ஏற்பட்டிருக்கிறது. சிவி சண்முகம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஒரு போர்க்கொடி தூக்கிய நிலையில் தான், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரியில் இருக்கக்கூடிய நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். தற்பொழுது அதிமுக தலைமை அழைத்ததின் பெயரில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக சென்னை நோக்கி படையெடுத்து இருக்கிறார்கள். இது அரசியலில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நைட்... ஒரே வீடியோ... தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்... முதல்வர் கனவில் விழுந்தது மண்ணு...!