கோவை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய ஒரு சம்பவம் இன்று காலை நடைபெற்றது. கோவை புதூர் பகுதியில் உள்ள சி.பி.எம். கல்லூரிக்கு அருகிலான ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில், சுமார் 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடம் கோவை புதூர் மேற்கு புறவழிச்சாலை அருகேயுள்ள மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த ஒதுக்குப்புறப் பகுதியாகும். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சந்தேகத்திற்குரிய நிலையில் சடலத்தைக் கண்டு உடனடியாக குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் குனியமுத்தூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சடலம் அரை நிர்வாண நிலையில் இருந்ததால், இது பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்யப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உடனடியாக எழுந்தது. மேலும், பெண்ணின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்ததால் அவரது அடையாளத்தை உறுதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "தாய் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்"..! மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற இலட்சணமா CM சார் என கேள்வி எழுப்பியுள்ளது. உங்க ஆட்சியில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறைகள், படுகொலைகள் அதிமாக நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா டயலாக் பேசி, reels வித்தைகளைக் காட்டாமல் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய அக்கறை காட்டுங்க டம்மி முதல்வரே என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "ஆபரேஷன் டூஃபான்" விவகாரம்..!! தமிழ்நாட்டின் கவனத்திற்கு கேரள முதல்வர் பரபரப்பு கடிதம்..!!