தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. முக்கியக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தங்கள் வியூகங்களை அமைப்பதிலும், வலிமையான கூட்டணிகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திமுகவின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்" என்று பேசியது குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த வைகோ, "அதிமுக 70 தொகுதிகள்கூட தாண்ட மாட்டார்கள்" என்று நேரடியாகவும், காட்டமாகவும் பதிலளித்து, அதிமுகவின் தேர்தல் குறித்த இலக்கு குறித்துத் தன் தரப்பு அரசியல் விமர்சனத்தை முன்வைத்தார். அவர் இவ்வாறு பேசி முடித்த அடுத்த கணமே, தனக்கு கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டும், நேரம் ஆகிவிட்டது என்று தெரிவித்துவிட்டு, செய்தியாளர் கூட்டத்திலிருந்து வேக வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி'! நாளை தொடங்குகிறது திமுகவின் தேர்தல் பரப்புரை!
அவரது இந்இந்தப் பதில்ரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு வைகோ அளித்த இந்தப் பதில், வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் மேலும் பல விவாதங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைகோவின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் சூழலில் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை இது இப்போதே சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிச்சயம்! கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்! - டி.டி.வி. தினகரன் சூளுரை!