பாமக வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தில் அன்புமணி ராமதாசின் பெயரும் புகைப்படமும் இடம்பெறாதது கட்சியினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் போக்கு இருந்து வருகிற நிலையில் பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தார்.
புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை கொண்டு மாநில நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தினை மருத்துவர் ராமதாசு நடத்தி கட்சியில் நிர்வாகிகளை நியமனம் செய்யும் அதிகாரம் நீக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளதாகவும் அன்புமணி நடத்தும் கூட்டங்கள், செயற்குழு கூட்டம் செல்லாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் ராமதாஸ் அனுப்பினார்.
இதையும் படிங்க: வெச்சகுறி தப்பாது..! ஆட்சியில் பங்கு.. அன்புமணி திட்டவட்டம்..!
மேலும் அன்புமணி ராமதாஸ் தனது பெயரை பயன்படுத்த கூடாது வேண்டுமென்றால் இனிஷியலாக பயன்படுத்து கொள்ளலாம் தனது வீட்டில் ஒட்டிக்கேட்பு கருவி இருந்தததாகவும் ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் நேற்றைய தினம் புகாரளித்திருந்தார். இந்நிலையில் இன்று பாமகவின் 37 வது ஆண்டு விழாவினை ராமதாஸ் தைலாபுரம் இல்லத்துல் கட்சி கொடியை ஏற்றி தலைவர் சிலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்.
பாமகவின் 37 வது துவக்க நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வன்னியர் சங் சார்பில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்காக துண்டு பிரசுரத்தை இன்று வெளிக்காட்டினார். அந்த துண்டு பிரசுரத்தில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் புகைப்படமும் இடம்பெறாமல் உள்ளது கட்சியினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜீலை 20 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்காத கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: "HAPPY அண்ணாச்சி"... விரைவில் அன்புமணியோடு சந்திப்பு! குஷியில் பேசிய ராமதாஸ்..!