சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மொழி பிரச்சனை அதிக அளவில் பேசப்பட்ட வருவதாக தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு மும்மொழி கொள்கை, திமுகவுக்கு அரசுக்கு இரு மொழி கொள்கை. ஆனால் பாமகவிற்கு ஒரு மொழிக் கொள்கைதான் எனவும் தாய்மொழியை போற்றி வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

நோபல் பரிசு பெற்றவர்களில் 90 சதவீதத்தினர் சொந்த தாய் மொழியில் படித்தவர்கள் தான் என்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் தமிழ் மொழியை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் 45 சதவீதம் மட்டுமே அரசு பள்ளிகள் உள்ளதாகவும், கடந்த 58 ஆண்டுகளில் 55 ஆயிரம் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளதாகவும் கூறினார்.

மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசி அன்புமணி ராமதாஸ், தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக அரசு தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பினார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை என்று கூறிய அவர், கொள்கையை மாற்றச் சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது என திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: 3,192 ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!